தெற்கு அந்தமான் அருகே நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து எதிர்வரும் 2 நாட்களில் வட தமிழகத்தை நோக்கி நகரும் என்றும் வானிலை ஆய்வு நிலையம் நேற்று தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் தற்போது தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழைப் பெய்து வருகிறது.
மேலடுக்கு சுழற்சி: இந்த நிலையில், வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் மழை நீடிக்கும்
தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் தமிழக கடற்கரைக்கு அப்பால், வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் தொடர்ந்து வலுவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி நீடிக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்து வரும் 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
இது வரும் டிசம்பர் 6-ஆம் தேதி வரையிலான கால கட்டத்தில், வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு நிலைய பணிப்பானர் எஸ். பாலச்சந்திரன் தெரிவித்தார்.
சராசரியை விட அதிகம்: கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மழைப் பதிவாகியுள்ளது. 17 இடங்களில் கடும் மழை வீழ்ச்சி இடம்பெற்றுள்ளது.
லட்சத்தீவில் நீடிக்கும் ஒக்கி புயல வெள்ளிக்கிழமை தீவிரப் புயலாக லட்சத்தீவு மற்றும் தென் கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது. இந்த புயல் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்கிறது.


0 Comments