Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதி நாடு திரும்பினார்

தென்கொரிய ஜனாதிபதி முன்ஜெயினின் விசேட அழைப்புக்கு அமைவாக தென்கொரியாவுக்கு மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன நாடு திரும்பியுள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையில் நட்புறவை வலுப்படுத்தி நாட்டுக்கு பொருளாதார நன்மைகள் பலவற்றை பெற்றுக்கொண்டு தனது உத்தியோகப்பூர்வ பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் நேற்று இரவு நாடு திரும்பினர்.
இலங்கைக்கும் தென்கொரியாவிற்கும் இடையிலான ராஜதந்திர தொடர்புகளுக்கு 40 வருடங்கள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்தி இரு நாட்டுத் தலைவர்களுக்கிடையில் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடைப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments