தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 7,000 பேரை அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பான பெவ்ரல் அமைப்பின் தலைவரான ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக தேசிய கண்காணிப்பாளர்களுடன் சர்வதேச கண்காணிப்பாளர்களும் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டாலும், நிதி பற்றாக்குறை காரணமாக இம்முறை சர்வதேச கண்காணிப்பாளர்கள் அழைக்கப்படமாட்டார்கள் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவால் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே ரோஹண ஹெட்டியாராச்சி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“இலங்கையில் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் பல உள்ளமையால், இத்தேர்தலை கண்காணிப்பதற்காக சர்வதேச கண்காணிப்பாளர்கள் அவசியமில்லை என்பது தான் எமது கருத்தாக இருக்கிறது.
அத்தோடு, தேசிய தேர்தலன்றி சிறிய தேர்தலொன்றே தற்போது நடைபெறவுள்ளமையாலும் சர்வதேச கண்காணிப்பாளர்கள் தேவைப்படமாட்டார்கள். இதற்காக நாம் தற்போதே ஆயத்த நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டோம். அந்தவகையில், நாடளாவிய ரீதியில் 7 ஆயிரம் கண்காணிப்பாளர்களை அமர்த்துவதற்கு எம்மால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments