Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு துயிலுமில்லங்கள் மாவீரர் நாளுக்காக தயார்!

மாவீரர் தினத்தினை உணர்வுபூர்வமான அனுஸ்டிப்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறப்பான முறையில் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லம், தரவை மாவீரர் துயிலும் இல்லம், மாவடிமுன்மாரி துயிலும் இல்லம் ஆகியவற்றில் இம்முறை மாவீரர் தினம் அனுஸ்டிப்பதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளன.
முன்னாள் போராளிகள், பொதுமக்கள், பொது அமைப்புக்கள், ஆதரவாளர்களின் ஏற்பாட்டில் இம்முறை மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் இருப்புக்காக போராடி தன்னுயிர்களை தியாகம் செய்த வீரர்களை நினைவுகூரும் இந்த நிகழ்வில் பெருமளவான பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மூன்று தசாப்த கால யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் முதன்முறையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்படும் மாவீரர் தினமாக இது பார்க்கப்படுகின்றது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments