புத்தகப் பையின் எடை காரணமாகவே அநேக பாடசாலை மாணவர்கள் கூன் நோய்க்கு முகம் கொடுப்பதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கூனல் நோய் தொடர்பாக அறிவூட்டவதற்காக எற்பாடு செய்யப்பட்ட நடைபவனி நேற்று சுகாதார அமைச்சர் தலைமையில் கொழும்பில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர் புத்தக பையின் எடை காரணமாகவே அநேக பாடசாலை மாணவர்கள் கூன் நோய்க்கு முகம் கொடுப்பதாக குறிப்பிட்டார்.
இதன்காரணமாக பாடசாலை மாணவர்களை கூனல் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்க புதிய புத்தகப்பை ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
கூன் ஏற்படுவதில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாப்பதற்காக புதிய புத்தகப்பை ஒன்றை அறிமுகப்படுத்துமாறு நிபுணத்துவ மருத்துவர்கள் பரிந்தரை செய்துள்ளதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
இந்த யோசனையை கருத்தில்கொண்டு அடுத்த வருடம் முதல் புதிய புத்தகப்பையை அறிமுகம் செய்ய உத்தேசித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
0 Comments