Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சிவசக்தி ஆனந்தனுக்கு பங்கேற்க அனுமதி வழங்காமல், இரா.சம்பந்தன் தவறிழைத்துள்ளார்-கி.தேவராசா

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானங்களை, தமிழரசுக் கட்சி தனித்து எடுப்பதை ஏனைய கட்சிகள் ஏற்றுக்கொள்ள முடியாதென தமிழ் மக்கள் பேரவையின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் கி.தேவராசா தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.குறிப்பாக, அரசியல் யாப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு பங்கேற்க அனுமதி வழங்காமல், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தவறிழைத்துள்ளாரென தேவராஜா மேலும் குறிப்பிட்டார்.
வன்னி மாவட்டமானது, யுத்தத்தால் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்ட பிரதேசமாகும். அந்த வகையில் குறித்த மாவட்டத்தின் பிரதிநிதி ஒருவருக்கு நாடாளுமன்றில் கருத்துக்களை முன்வைக்க இடமளிக்காமை ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments