மட்டக்களப்பு - கிரான் பகுதியில் நேற்று மாலை 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். பேருந்தில் இருந்து இறங்கிய பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் உயிரிழந்த பெண் 49 வயதுடையவர் எனவும், வவுனியாவில் இருந்து கிரான் கோரகல்லிமடுவில் உள்ள உறவினரின் வீட்டுக்கு வருகை தந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
0 Comments