அர்ஜுன அலோசியஸுடன் தொலைபேசி மூலம் தொடர்புகளை பேணிய கோப் குழுவை சேர்ந்த 5 எம்.பிக்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளது.
அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர , அஜித் பெரேரா , சுஜிவ சேனசிங்க மற்றும் எம்.பிக்களானன ஹர்சன ராஜகருண , ஹெக்டர் ஹப்புஹாமி ஆகியோருக்கு எதிராகவே இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்களுக்கு நெருக்கமானவர்களினதும் சொத்துக்கள் தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கையொன்றை பெற்றுத்தருமாறும் அந்த முறைப்பாட்டினூடாக கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது


0 Comments