அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய முன்மொழிவுகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் ஆலோசனைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஊடகத்துறை மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிடம் கையளித்துள்ளது.
2018 வரவு செலவுத் திட்டம் நாளை மறுதினம் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2018 வரவு செலவுத் திட்டத்திற்காக சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ள ஆலோசனைகளில் இதனை சுட்டிக்காட்டியுள்ளது. கட்சி சார்பில் இதனை ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர, நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிடம் கையளித்துள்ளார்.
வாழ்க்கைச் செலவை குறைத்தல், நாட்டின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் கல்வி, சுகாதார சேவைகள் குறித்த ஆலோசனைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முன்வைத்துள்ளது.
கடந்த வரவு செலவுத்திட்டத்தின் போதும் சுதந்திரக் கட்சியினால் யோசனைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலான யோசனைகள் ஏற்கப்பட்டதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி குறிப்பிட்டுள்ளது. -(3)


0 Comments