Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற ஒளி விழா

எம்..எம்.அஸ்ஹர்)

பட்டிருப்பு தேசிய பாடசாலை களுவாஞ்சிக்குடி கிறிஸ்தவ ஆசிரியர்களும் மாணவர்களும் யேசு கிருஸ்துவின்பிறப்பையொட்டி ஒழுங்கு செய்திருந்த ” ஒளி விழா ” அண்மையில்                          
  (2.11,2017) பாடசாலை மண்டபத்தில் பாடசாலை அதிபர்கே.தம்பிராஜா தலைமையில் இடம்பெற்றது.
மெதடிஸ்த சபையின் கல்லாறு முகாமைக்குழு சேகரம் அருட் திரு ஜே.ஜேஞானரூபன் பிரதம அதியாகவும் கோட்டக்கல்விபணிப்பாளர் வீ.திரவியராஜா பாடசாலை அபிவிருத்தி சபை செயலாளர் கே.யோகநாதன் ஓய்வு பெற்ற ஆசிரியை கே.ஜெயந்திஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் பிரதி அதிபர்களான ரீ.ஜனேந்திரராஜா என்.நாகேந்திரன் எம்.சுவேந்திரராஜா ஆகியோர்விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
ஜெபம் வரவேற்பு நடனம் வரவேற்புரை வேத வாசிப்பு கிறிஸ்மஸ் செய்தி கரோல் கீதம் என்பன இடம்பெற்றன.
சகல இனத்தைச் சேர்ந்த ஆசிரியர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை  கல்லூரி வரலாற்று நிகழ்வாகும்.

Post a Comment

0 Comments