பெண் ஒருவரை ஓட்டோவில் கடத்திச் சென்று வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 65 வயது வயோதிபர் கைது செய்யப்பட்டார். அவரை எதிர்வரும் 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டது. சாவகச்சேரியைச் சேர்ந்த குறித்த பெண் கடந்த 30 ஆம் திகதி மந்திகை மருத்துவமனையில் மனநோய்க்குச் சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது தன்னை முதியவர் ஒருவர் ஓட்டோவில் கடத்திச் சென்று பாழடைந்த வீடொன்றினுள் வைத்து வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்று முதியவருக்கு எதிராகக் குறித்த பெண் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
0 Comments