பாகிஸ்தான் கடற்படை கப்பல் சயிப் நல்லெண்ண பயணமாக எதிர்வரும் 05ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவிருக்கிறது. இக்கடற்படைக் கப்பலானது, எதிர்வரும் 8ம் திகதி வரை இலங்கையில் தரித்திருக்கும் . இதற்கான வரவேற்பு நிகழ்வு, எதிர்வரும் 06ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதன்போது, இருதரப்பு கடற்படை வீரர்களும் பல்வேறு தொழில்சார் நடவடிக்கைகள், பயிற்சிகள் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.
0 Comments