Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு தீவிரமடைந்த நிலையில், பல்வேறு பகுதியில் மோதல் நிலை.

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு தீவிரமடைந்த நிலையில், பல்வேறு பகுதியில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.
இன்றைய தினம் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்ப்புடன் வருகை தந்தவர்களுக்கு நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பல எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் கிடைப்பதில்லை என குறிப்பிடப்படுகின்றது. அத்துடன் எரிபொருள் கிடைக்கும் நேரத்தை உறுதியாக கூற முடியாதென எரிபொருள் நிலையங்களின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, எரிபொருள் ஓரளவு உள்ள இடங்களில், பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சில எரிபொருள் நிலையத்தில் சற்று நேரத்திற்கு முன்னர் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாகன சாரதிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையில், போத்தல்களில் எரிபொருளை பெற்றுக்கொள்வோர் இடையில் குறுக்கிட்டு எரிபொருளை வாங்க முயற்சின்றனர்.
எனினும் வாகன சாரதிகளுக்கு மட்டும் எரிபொருள் வழங்க முடிவு செய்துள்ளமையால், போத்தல்களில் பெற்றுக்கொள்ள வருவோர் மோதல்களில் ஈடுபடுகின்றனர்.
இதன் காரணமாக பல எரிபொருள் நிலையங்களில் வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை, நவீன மோட்டார் வாகனங்களுக்கு அதிகமான எரிபொருள் வழங்கப்படுவதாகவும், மோட்டார் சைக்கிள் மற்றும் சாதாரண மோட்டார் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கும் நடவடிக்கை மந்தமான நிலையில் முன்னெடுக்கப்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் எரிபொருள் வழங்கப்படுகின்ற எரிபொருள் நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments