Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

புதிய அரசியலமைப்பு தொடர்பில் பேஸ்புக் மூலம் மக்கள் கருத்தறிய அரசாங்கம் யோசனை

அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் புதிய அரசியலமைப்பு தொடர்பாக இடைக்கால அறிக்கை தொடர்பான பொதுமக்கள் கருத்துக்களை இணைத்தளங்கள் மூலம் பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்காக பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமே இலகுவாக பொதுமக்களின் கருத்துக்களை அறிந்துக்கொள்ள முடியுமென்ற யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக விசேட பேஸ்புக் பக்கமொன்றை பயன்படுத்துவதற்கு ஆராயப்பட்டு வருவதாகவும் பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவித்துள்ளன.
இவ்வாறு செய்யும் பட்சத்தில் ஆசிய வலயத்தில் இணையம் மூலம் மக்கள் கருத்துக்களை அறிந்த முதலாவது நாடாக இலங்கை இருக்குமென தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments