சமூக நல்லிணக்கம் குறித்து சமூக மட்டத்தில் சிவில் சமூக அமைப்புக்களும் சமய பிரமுகர்களும் மக்களை விழிப்பூட்டல் செய்ய வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்;டத்தின் சில இடங்களில் ஏற்பட்ட அசாதரண நிலை குறித்து இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
சமூக நல்லிணக்கம் குறித்து சமூக மட்டத்தில் சிவில் சமூக அமைப்புக்களும் சமய பிரமுகர்களும் மக்களை விழிப்பூட்டல் செய்ய வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பஸ் தரிப்பு நிலைய கட்டிட விவகாரத்தில் ஏற்பட்ட முறுகல் நிலை இன விரிசனை ஏற்படுத்தி விடுமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாழைச்சேனை பஸ்தரிப்பு நிலையக் கட்டி விவகாரம் குறித்து பேசி ஒரு இணக்கப்பாடு எட்டப்படல் வேண்டும். அன்மையில் ஏற்பட்ட பிரச்சினைக்கு அடிப்படைக்காரணமாக இருப்பது வாழைச்சேனை பஸ் தரிப்பு விவகாரமாகும்.
இந்த விடயம் கவனத்திற்கொள்ளப்பட்டு இந்தப்பிரச்சினை சுமூகமாக தீர்த்து வைக்கப்படல் வேண்டும்.
இந்த விடயம் கவனத்திற்கொள்ளப்பட்டு இந்தப்பிரச்சினை சுமூகமாக தீர்த்து வைக்கப்படல் வேண்டும்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம் பெற்ற சில சம்பவங்கள் கவலையளிப்பதுடன் அவ்வாறான சம்பவங்கள் தொடராத வண்ணம் பார்த்துக் கொள்வது அனைவரது பொறுப்பாகும்.
இது குறித்து நாம் சிரேஷ்ட அமைச்சர் பௌஷி தலைமையில் நாடாளுமன்றத்தில் ஒன்று கூடி ஆராய்ந்தோம். அதில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் பிரதியமைச்சர் அமீர் அலி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹீர் மௌலானா ஆகியோர் கலந்து கொண்டனர்.
சமூக மட்டத்தில் சிவில் சமூக அமைப்புக்களையும் சமய பிரமுகர்களையும் ஒன்று கூட்டி நல்லிணக்கம் தொடர்பான விழிப்பூட்டல்களை மேற் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபரிடத்தில் இது தொடர்பாக வலியுறுத்தியுள்ளோம்.
புதிய அரசியலமைப்புக்கான முன்னெடுப்புக்கள் இடம் பெற்று வருகின்ற போது நாம் நமது சமூக ஒற்றுமையை இன ஐக்கியத்தை பலப்படுத்த வேண்டும். அவ்வாறில்லாமல் நாம் நாம் பலவீனப்படக் கூடாது.
பிற்போக்குத் தனமான சிந்தiனியலிருந்து விடுபட்டு முற்போக்கான சிந்தனைகளுடன் நாம் முன்னேறிச் செல்ல வேண்டும்.
சிவில் சமூக தலைவர்கள் சமய பிரமுகர்கள் நடு நிலையாக கலந்துரையாடல்களை மேற் கொண்டு இவ்வாறான சம்பவங்கள் தொடராமல் கலந்துரையாடல்களை மேற் கொள்வதுடன் பிரச்சினையின் ஆரம்பத்திலேயே பிரச்சினைக்கான தீர்வு கண்டு அவைகள் தீர்த்து வைக்கப்படல் வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.


0 Comments