சுனாமி கடற்பேரலை தொடர்பில் தெளிவுபடுத்தும் முன்னெச்சரிக்கை ஒத்திகை நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ளது. 14 கரையோர மாவட்டங்களில் சுனாமி எச்சரிக்கை கோபுரம் அமைக்கப்பட்டுள்ள 77 இடங்களில் இந்த முன்னெச்சரிக்கை நிகழ்வு நடத்தப்படவுள்ளது.
இதன்போது சுனாமி எச்சரிக்கை ஒலியெழுப்பும் கோபுரங்களிலிருந்து எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்படுமெனவும் இது தொடர்பாக மக்கள் அச்சமடைய வேண்டாமெனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளத.
இது குறித்து வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கும் தெளிவுபடுத்துமாறு இடர்முகாமைத்துவ நிலையம் சுற்றுலா ஹோட்டல் துறையை கேட்டுக்கொண்டுள்ளது.


0 Comments