பெரியகல்லாறு பிரதான வீதியில் வைத்தியசாலை சந்தி தரிப்பிடத்தில் இம்மாதம் 1ம் திகதி மாலை நடைபெற்ற சிறியரக வட்டாவாகனம். மோட்டார்சைக்கிள், இ.போ.ச பஸ்வண்டி விபத்தில் மோட்டார் சைக்க்pளை செலுத்தி வந்த பெரியகல்லாற்றைச் சேர்ந்த க.நடேசன்(34) என்ற இளம் குடும்பஸ்தர் படுகாயமடைந்து. ஆபத்தான நிலையில் பெரியகல்லாறு பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிகச் சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுப்பிவைக்கப்பட்டு உணர்வு திரும்பாத நிலையில் கடந்த 7 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
எனினும் சிகிச்சை பலனளிக்காததால்; (இன்று) செவ்வாய்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளார். விபத்தில் சம்பந்தப்படட சாரதி 2நாட்கள் தலைமறைவாக இருந்து அதன் பின்னர் சரணடைந்துள்ளார். அவர் தற்போது விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தனியார் கம்பனியில் மின்னியலாளராக கடமையாற்றிய நடேசன் கடமை முடிந்து தன் பிள்ளையை வைத்தியரிடம் கொண்டு செல்வதற்காக வீடு செல்லும் வழியிலேயே இந்த பரிதாப சம்பம் நடைபெற்றுள்ளது.
இவர் சரியான முறையிலேயே வாகனத்தை நிதானமாக செலுத்தி வந்ததாக தெரிய வருகின்றது.
இவர் இரண்டு குழந்தைகளின் தந்தையாவார். இலங்கையில் இடம்பெறும் வாகன விபத்துக்களில் அனேகமானவை அதீத கட்டுப்படுத்த முடியாத வேகத்தால்தான் இடம்பெறகின்றது. இதனால் உயிரிழப்பது அப்பாவிகளாகவே இருக்கின்றனர்.


0 Comments