Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பொதுநலவாய நாடுகள் பாராளுமன்றக்குழு இலங்கை வருகிறது!

கூட்டு எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுக்கள் குறத்து கண்காணிக்கும் நோக்கில் பொதுநலவாய நாடுகள் பாராளுமன்றக்குழு இலங்கைக்கு வரவுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 11ம் திகதி பொதுநலவாய அமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு வர உள்ளனர். பங்களாதேஸில் நடைபெற்று வரும் பொதுநலவாய நாடுகள் பாராளுமன்றக் குழு அமர்வுகளில் பங்கேற்றதன் பின்னர், பிரதிநிதிகள் இலங்கைக்கு வர உள்ளனர்.
தமது உரிமைகள் முடக்கப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியினர் பொதுநலவாய நாடுகள் பாராளுமன்றக் குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளனர். புதிய அரசியல் சாசனம் குறித்த பாராளுமன்ற விவாதங்களின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 12 உறுப்பினர்களுக்கு 820 நிமிடங்களும், கூட்டு எதிர்க்கட்சியின் 53 உறுப்பினர்களுக்கு 210 நிமிடங்களும் ஒதுக்கப்பட்டது என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments