Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

காலையுணவு சாப்பிடாமல் பாடசாலை வரும் 33 வீத மாணவர்கள்!

இலங்கையில் 33 வீதமான மாணவர்கள் காலை உணவை உட்கொள்வதில்லை எனவும், 14 இலட்சம் மாணவர்கள் இவ்வாறு காலை உணவை சாப்பிடாமல் பாடசாலைக்கு வருவதாகவும், ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சின் மருத்துவ ஆய்வு மையத்தின் போஷாக்கு பிரிவுக்கு பொறுப்பான சிறப்பு வைத்திய நிபுணரான வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ கருத்து தெரிவிக்கையில், “காலை உணவை உட்கொள்ளாத மாணவர்களிடத்தில் கணித ஆற்றல், நினைவாற்றல் குறைதல், பலவீனமாக காணப்படுதல், பிரச்சனைகளை தீர்க்கும் ஆற்றல் குறைதல், போட்டிப் பரீட்சைகளில் குறைந்த புள்ளிகளை பெறுதல் மற்றும் உயரம் குறைதல் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன.
பொதுவாக காலை நேரங்களில் தமது பிள்ளைகளுக்கு பால் மட்டும் பருக கொடுப்பதை பெற்றோர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். அது போதுமான ஒன்றல்ல. பள்ளி பருவத்திலேயே மாணவர்களிடத்தில் துரிதமான வளர்ச்சி காணப்படும். எனவே பால் கொடுப்பதை பார்க்கிலும் உணவு கொடுப்பது சிறந்த ஒன்றாகும்.இதன்படி, காலை உணவு என்பது தானியம், பழவகை, மரக்கறி, மாமிசம் என உணவு பிரிவுகளை கொண்ட பிரதான உணவு வேளையாக இருத்தல் வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Post a Comment

0 Comments