Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

யாழ். கொழும்புத் துறை பகுதியில் போலி பணத்தாள்களை அச்சிட்ட இளம் தம்பதியினர் கைது

யாழ். கொழும்புத் துறை நெலுக்குளம் பகுதியில், போலி பணத்தாள்களை அச்சிட்ட இளம் தம்பதியினரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
விஷேட புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அவர்கள் நேற்று கைதுசெய்துசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தம்பதியினரின் வீட்டை சுற்றி வளைத்த அதிகாரிகள், 24 வயது மதிக்கதக்க மனைவியை முதலில் கைதுசெய்ததாவும், பின்னர் கணவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்
இதன்போது 5000ரூபா பணத்தாள்கள் 400, 1000ரூபா பணத்தாள்கள் 148, 2 பிரிண்டர், 1 ஸ்கேனர், 1 மடிக்கணணி ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.மேலும் இச்சம்பவம் தொடர்பில், அதிகாரிகள் தீவிரவிசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments