Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பிலம் பெற்றோல் தட்டுப்பாடு –பெற்றோல் நிலையங்களில் அலைமோதும் மக்கள்

நாடளாவிய ரீதியில் தற்போது நிலவுகின்ற பெற்றோல் தட்டுபாடு நிலையை தொடர்ந்து இன்று காலை முதல் நண்பகல் வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களில் பெற்றோல் கொள்வனவு செய்வதில் வாகன சாரதிகள் நீண்ட வருசையில் காத்திருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதை காணக்கூடியதாக உள்ளது .தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவுகின்ற பெற்றோல் தட்டுபாடு நிலையினை தொடர்ந்து எரிபொருள் நிலையங்களில் பெற்றோல் குறிப்பிட்ட அளவிலே வழங்கப்படுகின்றன.
இன்று காலை முதல் நண்பகல் வரை வழங்கப்பட்ட பெற்றோல் முடிவடைந்த நிலையில் சில எரிபொருள் நிலையங்களில் பெற்றோல் இல்லை என பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.
எனினும் பெற்றோல் பற்றாக்குறை ஏற்படாத வகையில் பெற்றோல்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
DSC08878DSC08881DSC08888

Post a Comment

0 Comments