Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அர்ஜுன அலோசியசுடன் தொடர்பு வைத்திருந்த கோப் குழு உறுப்பினர்கள்

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட கோப் குழுவின் 5 உறுப்பினர்கள் அர்ஜுன் அலோசியஸுடன் தொலைப்பேசி உரையாடல்களை மேற்கொண்டுள்ளதாக பிணை முறி விசாரணை ஆணைக்குழுவில் சட்டமா அதிபர் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதனுடன் தொடர்புடைய தொலைப்பேசி உரையாடல் ஆவணமொன்றை சட்டமா அதிபர் திணைக்களம் ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர , சுஜீவ செனசிங்க , பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹெக்டர் அப்புஹாமி மற்றும் ஹர்ஷன ராஜகருணா இவ்வாறு அர்ஜுன் அலோசியஸுடன் தொலைப்பேசியில் உரையாடியுள்ளதாக இதனூடாக சட்ட மா அதிபர் திணைக்களம் வெளியிட்டுள்ளது

Post a Comment

0 Comments