உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வேட்பு மனு கோரலுக்கான அறிவிப்பு எதிர்வரும் 27ஆம் திகதி வெளியிடப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இதன்படி வேட்பு மனு தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டு 14 நாட்களின் பின்னர் வேட்பு மனு தாக்கல்கள் இடம்பெறுமெனவும் அதனை தொடர்ந்து தேர்தலுக்கான தினம் தொடர்பான அறிவித்தல் விடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


0 Comments