கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் அமைந்துள்ள தொடர்மாடி வீட்டு கட்டிடமொன்றின் காவலாளி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அந்த தொடர்மாடி வீட்டு கட்டிடத்தின் நுளைவு வாயிலுக்கு அருகிலேயே இவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
இவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாகவே சந்தேகிக்கப்படுகின்றது.
கொழும்பு 13 ஜிந்துப்பிட்டி பகுதியை சேர்ந்த 37 வயதுடைய ஆர்.திலகராஜா என்ற நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


0 Comments