|
முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்திடமுள்ள 111 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்காக 148 மில்லியன் ரூபா இராணுவத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ள நிலையில் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் அக்காணிகள் பொதுமக்களிடத்தில் கையளிக்கப்படும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
|
'நீண்டகால கோரிக்கையான கேப்பாபுலவு காணி விடுவிப்பு எமது முயற்சியினால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. முதல் கட்டமாக 243 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டதுடன் எமது அமைச்சின் 5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் 189 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் கட்டமாக 111 ஏக்கர் காணியை விடுவிக்க இக் காணிக்குள் உள்ள இராணுவத்தினரின் பாதுகாப்பு முகாம்களை அகற்றி மாற்றிடத்தில் அமைத்திட 148 மில்லியன் ரூபா தேவை என்பதை அறியத்தந்ததன் நிமித்தம் இத்தொகையை அமைச்சரவை பத்திரம் ஒன்றின் மூலம் பெற்றுத்தர நான் இணக்கம் தெரிவித்திருந்தேன். இதன்படி 148 மில்லியன் ரூபா இராணுவத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதி இத்தொகை வழங்கப்பட்டதற்கு இணங்க 111 ஏக்கர் காணியை பொதுமக்களுக்கு டிசம்பர் மாதத்திற்குள் வழங்குவதற்கான நடைமுறை வேலைத்திட்டங்களை இராணுவத் தரப்பு மேற்கொண்டுள்ளது என்றார்.
|


0 Comments