பதுளை மாவட்டத்தின் மண்சரிவு அபாயமுள்ள வலயங்களில் 29,000 – இற்கும் அதிகமான கட்டடங்கள் காணப்படுவதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
அவற்றில் 98 பாடசாலைகளும் அடங்குவதாக நிறுவகம் சுட்டிக்காட்டியுள்ளது.
பதுளை மாவட்டத்திலுள்ள 13 பிரதேச செயலகப் பிரிவுகளில் இந்த கட்டடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன.
பதுளை, ஹாலி எல, ஹப்புத்தளை, வெலிமடை உள்ளிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளிலேயே இந்த அபாய நிலை காணப்படுவதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் குறிப்பிட்டுள்ளது.
ண்சரிவு அபாயம் நிலவுவதாக முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து விரைவில் கவனம் செலுத்த வேண்டியது மலையக அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் கடமையல்லவா?


0 Comments