ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், 150 சீனர்களுக்கு கொழும்பில் திருமணம் நடைபெறவுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் இந்த திருமண நிகழ்வு நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் மேற்கொண்டு வருகிறது.
திருமணம் முடிந்த பின்னர், அன்றிரவு பத்தரமுல்ல - வோட்டர் எட்ஜ் விடுதியில் இராப்போசன விருந்து இடம்பெறவுள்ளது. இதனையடுத்து அடுத்த நாள், திருமணம் முடிந்த ஜோடிகள் மூன்று குழுக்களாக, யால, சிகிரியா, கண்டி ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.


0 Comments