ஓடை, நதி, நீர் வீழ்ச்சிகள் உள்ள இடங்களில் நீராடும் போது அந்த இடங்களில் பொருத்தப்பட்டுள்ள அறிவிப்புக்கள் தொடர்பில் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டுமென்று நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் வசந்த பண்டார பலுகஸ்வௌ தெரிவித்துள்ளார்.
இந்த ஆலோசனைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஏற்படும் அனர்த்தங்களைத் தவிர்க்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை லக்கல – அடென்வல பிரதேசத்தின் – தெல்கமுவ என்ற நதியில் நீராடச் சென்ற 8 பேர் நீரால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


0 Comments