வவுனியாவில் அதிக போதை கொண்ட12 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியாவின் இருவேறு பகுதிகளில் நேற்று இரவு குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா வைத்தியசாலைக்கு அருகிலுள்ள பேருந்து தரிப்பிட நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் தனிமையாக நின்றிருந்த ஒருவரை ரோந்து நடவடிக்கையில் சென்றிருந்த பொலிசார் சோதனையிட்ட போது அவரது உடமையில் கஞ்சா இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளம் நோக்கி கொண்டு செல்லவிருந்த 10 கிலோகிராம் கேரளா கஞ்சா குறித்த நபரிடம் இருந்து மீட்கப்பட்டது. அதனை எடுத்துச் சென்ற புத்தளத்தை சேர்ந்த 30 வயதுடைய குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
அத்துடன், கொழும்பு செல்வதற்காக வவுனியா பூட்சிட்டிக்கு முன்பாக சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவரின் பயணப் பொதியை சோதனை செய்த போது 2 கிலோகிராம் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதன் குறித்த நபரும் கைது செய்யப்பட்டார்.
12 கலோ கிராம் நிறை கொண்ட அதிக போதையுடைய கஞ்சாவுடன் குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
வவுனியா பொலிஸ் நிலை பதில் பொறுப்பதிகாரி ஆர்.எம்.எஸ்.குமாரசிங்க அவர்களின் தலைமையின் கீழ் உபபொலிஸ் பரிசோதகர் சுபசிங்க உள்ளிட்ட பொலிஸ் குழுவே குறித்த கஞ்சாவினை கைப்பற்றியுள்ளனர்.



0 Comments