அராலி கிழக்கு கிராம அலுவலர் அலுவலகம் முன்பாக நேற்று மாலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.நேற்று மாலை 3.45 மணியளவில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் சுழிபுரத்தைச் சேர்ந்த சிவராசா ஆனந்தகுமார் (வயது-35) என்பவரே உயிரிழந்தார்.
|
சுழிபுரத்தில் வசிக்கும் ஆனந்தகுமார், வீட்டில் இருந்து சற்றுத் தொலைவில் உள்ள இடத்திற்கு குடிதண்ணீர் எடுத்து வரச் சென்றுள்ளார்.அவர் குறுக்கு வீதியில் பயணித்துள்ளார். வீதித் திருப்பத்தில் எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் அவரது மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. படுகாயமடைந்த ஆனந்தக்குமார் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்து விட்டார். மற்றைய மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்களும் இந்த விபத்தில் காயமடைந்தனர். அவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
|
0 Comments