18 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கனகரத்னம் ஜீவரட்ணம் என்ற குறித்த அரசியல் கைதியே நிரபராதி என நீதிபதியினால் குறிப்பிடப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். இவரது வழக்கு ஆரம்பத்தில் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
0 Comments