மட்டக்களப்பு பட்டிருப்புக் கல்விப் பணிப்பாளராக திருக்கோவில் கல்வி வலயத்தில் பணிப்பாளராக கடமையாற்றிய ஆர்.சுகிர்தராஜன் இன்று (03) செவ்வாய்க்கிழமை தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம்2யைச் சேர்ந்தவர். பொத்துவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர் தனது ஆரம்பக் கல்வியை பொத்துவில் மெதடிஸ்த மிஷன் பாடசாலையில் கற்றுள்ளார். உயர்தரக் கல்வியினை தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்திலும் யாழ் பல்கலைக் கழகத்திலும், பேராதனை பல்கலைக் கழகத்தில் மெய்யியல் துறையில் சிறப்புப் பட்டம் பெற்றுள்ளார்.
அத்துடன் பேராதனையில் விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார்.
கடந்த 15 வருடங்களாக கல்முனை பற்றிமா தேசியப் பாடசாலையில் ஆசிரியராக பணியாற்றியவர். கல்முனைக் கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளர், சம்மாந்துறைக் கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருக்கோவில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.
கடந்த 5 வருடங்களாக திருக்கோவில் கல்வி வலயத்தின் கல்விப் பணிப்பாளராக பணியினை முன்னெடுத்தவர். தற்போது பட்டிருப்புக் கல்வி வலயத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை உத்தியோக பூர்வமாக தமது கடமைகளை பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
0 Comments