வாகன சாரதிகளுக்கு தண்டப்பணத்தை இணைத்தளத்தினூடாக செலுத்தக் கூடியவாறு திட்டமொன்றை அறிமுகப்படுத்த போக்குவரத்து பொலிஸார் எதிர்பார்த்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தற்போது தபாலகத்தில் தண்டப்பணத்தை செலுத்தி பொலிஸ் நிலையத்திற்கு சென்று சாரதி அனுமதிப்பத்திரத்தை மீள பெறுவதற்காக நீண்ட நேரத்தை செலவழிக்க வேண்டியுள்ளதாகவும் இதனால் இணையத்தினூடாக பணத்தை செலுத்தும் முறையை அறிமுகம் செய்தால் நேரங்களை மிச்சப்படுத்த முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.


0 Comments