மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு தமிழ் இளைஞர்களாலும் ,சமூக ஆர்வளர்களாலும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்ட போராட்டமொன்று நடத்த பட்டது.
75 % தமிழ் மக்கள் வாழும் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு நிரந்தரமான தமிழ் அரசாங்க அதிபரை நியமிக்குமாறு போராட்டத்தில் கலந்து கொண்டவர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த கவனயீர்ப்பு போராட்டமானது எந்த அரசியல் பின்னணியும் இல்லாமல் மட்டக்களப்பு வாழ் ஒட்டு மொத்த தமிழ் மக்களின் எதிர்கால நன்மை கருதி தன்னார்வமுள்ள தமிழ் இளைஞர்களால் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments