கொஸ்லந்த மீரியபெத்த மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 3 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது.
இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து விசேட அஞ்சலி நிகழ்வொன்று அந்த பகுதியில் இன்று நடத்தப்பட்டது.
2014ஆம் ஆண்டு ஒக்டோபர் 29ஆம் திகதி இடம்பெற்ற அனர்தத்தில் பாதிக்கப்பட்ட 75 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் அந்த இடத்தை அன்மித்த பகுதிகளில் தொடர்ந்தும் மண்சரிவு அபாயம் நிலவும் நிலையில் அந்த பகுதிகளில் வசிக்கும் 300 வரையான குடும்பங்களுக்கு இன்னும் வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments