Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மன்னார் கடல்படுக்கையில் எண்ணெய் அகழ்வில் ஈடுபடுவதற்கு 11 நிறுவனங்கள் விருப்பம்

மன்னார் கடல்படுக்கையில் எண்ணெய் அகழ்வில் ஈடுபடுவதற்கு 11 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கெய்ன் இந்தியா நிறுவனம் முன்னர் எண்ணெய் அகழ்வு முயற்சியில் ஈடுபட்ட எம்2 துண்டில், எண்ணெய் அகழ்வை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் கேள்விப் பத்திரங்களைக் கோரியிருந்தது.
இங்கு எண்ணெய் அகழ்வில் ஈடுபட விருப்பம் தெரிவித்து, 11 நிறுவனங்கள் விண்ணப்பித்திருப்பதாக, பெற்றோலிய வளங்கள் அமைச்சின் செயலர் பிரீனி விதானகே தெரிவித்துள்ளார்.
2015இல் எண்ணெய் விலைகளில் ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து, எம்2 துண்டில் எரிவாயு அகழ்வு முயற்சியில் ஈடுபட்ட கெய்ன் இந்தியா நிறுவனம், அதிலிருந்து விலகிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.(

Post a Comment

0 Comments