Home » » யாழ்ப்பாணத்தில் கிருமித் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் பார்வையிழந்தா

யாழ்ப்பாணத்தில் கிருமித் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் பார்வையிழந்தா

யாழ்ப்பாணத்தில் தனியார் வைத்தியசாலை ஒன்றில், சத்திர சிகிச்சை செய்து கொண்ட போது, கிருமித் தொற்றினால், கண்கள் பாதிக்கப்பட்ட ஐந்து பேருக்கு, கொழும்பு வைத்திய சாலையில் அளிக்கப்பட்டு வருகிறது, இவர்களில் நான்கு பேர் குணமான போதும், ஒருவர் கண் பார்வையை இழந்துள்ளார்.
கண் புரை நோயினால் பாதிக்கப்பட்ட பத்துப் பேர் திருநெல்வேலியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் கடந்த சனிக்கிழமை சத்திர சிகிச்சை செய்து கொண்டனர். ஐம்பது வயதுக்கு மேற்பட்ட அவர்களில் ஒன்பது பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் ஐந்து பேர் கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். அங்கு கண் மருத்துவ நிபுணரால் மீள கண் சத்திர சிகிச்சை செய்யப்பட்டது.
இவ்வாறு மீள் சிகிச்சை பெற்றுக்கொண்ட ஐவரில் மூவருக்கு மட்டுமே அது முழுப் பயனையும் அளித்துள்ளதாகவும் இருவருக்கு எந்த மாற்றமுமில்லை எனவும் ஒருவரின் கண் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரது கண்ணை அகற்ற வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது என்றும் தெரியவருகிறது.இதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலையில் மீள சத்திர சிகிச்சை செய்து கொண்டவர்களில் ஒருவர் மட்டுமே பூரண குணமடைந்ததாகவும் தெரியவந்துள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |