Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஐஎஸ் அமைப்பிலிருந்து தப்பியோடுபவர்கள் துருக்கிக்குள் நுழைவதற்கு முயற்சி-

ஐஎஸ் அமைப்பிலிருந்து தப்பியோடியுள்ள நூற்றுக்கணக்கானவர்கள் துருக்கியின் எல்லையை கடந்து மத்திய கிழக்கு ஐரோப்ப மற்றும் மேற்கு ஆபிரிக்க நாடுகளிற்கு தப்பிச்செல்வதற்காக சிரியாவின் இட்லிப் பிராந்தியத்தில் காத்திருக்கின்றனர்.இதேவேளை ஐஎஸ் அமைப்பின் பல முன்னாள் உறுப்பினர்கள் ஏற்கனவே கடும் பாதுகாப்பையும் மீறி துருக்கியின் தென்பகுதியில் உள்ள நகரங்களிற்குள் நுழைந்துள்ளனர்.ஆட்கடத்தல்காரர்களிற்கு 2000 அமெரிக்க டொலார்களை வழங்கி அவர்களின் உதவியுடன் சவுதிஅரேபியாவை சேர்ந்த நானகு ஐஎஸ் உறுப்பினர்கள் துருக்கிக்குள் நுழைந்துள்ளதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஐஎஸ் அமைப்பின் உறுப்பினர்கள் பலர் தங்கள் குடும்பத்தவர்களுடன் தப்பிச்செல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதன் காரணமாக சர்வதேச புலனாய்வு அமைப்புகள் புதிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.
ஐஎஸ் அமைப்பிலிருந்து தப்பியோடிய சவுதிஅரேபியாவை சேர்ந்த 300 பேர் இட்லிப் பகுதியில் ஓரு சமூகமாக வாழ்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Post a Comment

0 Comments