சிங்கள மக்கள் மத்தியில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன்.தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமை இவ்விதமாக தொடருவது தங்களுக்கும் எவ்விதமான நன்மையும் கிடைக்கபோவதில்லை என்று சிங்கள மக்கள் உணர்கின்றார்கள்.
இந்த நாடு தற்போதைய நிலையில் இருந்து பொருளாதார ரீதியாக விடுவிக்கப்பட வேண்டுமாயின் வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சணைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் அமரர் அ.அமிர்தலிங்கத்தின் 90 ஆவது பிறந்த நாள் நினைவுகளுடான நினைவுப் பேருரையும் இலட்சிய இதயங்களோடு என்னும் கருப்பொருளிலான நூல் வெளியீடும் நேற்று யாழ் பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட தலைவர் பெ.கனகசபாபதி தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஆர் சம்பந்தன், கருத்து தெரிவிக்கையில், இலங்கையின் ஒற்றுமையும், பாதுகாக்க வேண்டும் மற்றும் அது தொடர்பான மக்களுடைய இன ரீதியான மாற்றங்களை மக்கள் எற்றுக்கொள்ள கூடிய ஒரு அங்கீகாரம் வழங்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டார்.
வடக்கு, கிழக்கு ஆகிய மாகாணங்கள் இணைந்து ஒரு மாநிலமாக மாறவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து மறைந்த முன்னாள் எதிர்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் போன்றவர்கள் என்ன விதமான சேவையினை ஆற்றினார்கள் என்பதை மக்கள் அறிய வேண்டும் என்று தெரிவித்தார்.
இதில் தந்தை செல்வாவினால் ஆரம்பிக்கபட்டு மறைந்த அமிர்தலிங்கத்துடன் தொடர்ந்து அதன்பின்னர் தற்போது எமது பாதை கடுமையான பாதையாக இருக்கின்றது.
இப்பிரச்சினைகள் நாடு சுதந்திரம் அடைந்துக்கு முன்னர் தீர்க்கப்பட வேண்டிய நிலையில் இருந்து இருக்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
0 Comments