Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் வேறு பாடம் கற்பிக்க அனுமதியில்லை கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர்

கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் ஆரம்பக் கல்விக்கு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களை வேறு பாடங்களை கற்பிப்பதற்கு அனுமதிக்க வேண்டாமென கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் பாடசாலை அதிபர்களுக்கும் வலயக்கல்விப் பணிப்பாளர்களுக்கும் கண்டிப்பான பணிப்புரையை வழங்கியுள்ளார்.

கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு நியமனம் செய்யப்பட்ட ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் தமது நியமனத்தை தவிர்த்து வேறு பாடங்களைக் கற்பிப்பதனால் கிழக்கு மாகாண ஆரம்பக் கல்வித்தரம் வீழ்ச்சியடைந்து செல்வதாகவும்  5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் அடிப்படையில் கிழக்கு மாகாணம்  ஒன்பதாவது நிலையை அடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாகாணக் கல்வித் திணைக்களத் தகவல்களின்படி ஆரம்பக் கல்வித்துறைக்கு நியமனம் செய்யப்பட்ட 217 ஆசிரியர்கள் முதல் நியமனத்திற்கு முரணான வகையில் பாடசாலைகளில் கற்பித்தல் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
209 பேர் தமிழ்ப் பாடத்தையும் 2 பேர் சித்திரப் பாடத்தையும் 4 பேர் உடற்கல்வியையும் 2 பேர் இரண்டாம் மொழி சிங்களத்தையும் ஆரம்ம்பக் கல்விக்கென நியமனம் பெற்றவர்கள் கற்பித்து வருகின்றனர். இன்னும் சிலர் உயர்தர வகுப்புகளுக்கும் பாடங்களை கற்பித்து வருகின்றனர். 
விசேட பாடங்களை கற்பிக்க நியமிக்கப்பட்ட 113 பேர் ஆரம்பக்கல்வி ஆசிரியர்களாக பாடாசலைகளில் கடமையாற்றுகின்றனர். இந்நிலமைமை கிழக்கு மாகாணக் கல்வித்துறையில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. 

தமது நியமனத்திற்கு ஏற்றவாறு பாடங்களை கற்பிக்காதோருக்கு வருடாந்த சம்பள உயர்ச்சியை நிறுத்தி வைக்குமாறு கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் கேட்டுள்ளதுடன் அவ்வாறானவர்களை அவர்களது நியமனத்தன்மைக்கேற்ப பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யுமாறும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.




Post a Comment

0 Comments