Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை விவகாரம் : கோதாவிடம் இன்று விசாரணை

2012ஆம் ஆண்டில் வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட முன்னாள் அதிகாரிகள் சிலரிடம் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை நடத்தவுள்ளனர்.
இதன்படி இன்றைய தினம் கோதாபய ராஜபக்‌ஷ , முன்னாள் இராணுவ தளபதி ஜகத் ஜயசூரிய உள்ளிட்டோரிடம் விசாரணைகள் நடத்தப்படவுள்ளது.
இதற்காக குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2012ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சிறைச்சாலையில் கலவரம் ஏற்பட்டதுடன் இதன்போது 27 கைதிகள் கொல்லப்பட்டதுடன் மேலும் பல கைதிகள் காயமடைந்திருந்தனர். இந்நிலையில் இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொலையே என சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் சாட்சியமளித்திருந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments