கல்கிசையில் தங்க வைக்கப்பட்டிருந்த மியன்மார் ரோஹிந்தியர்களை காலி பூசா தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்ல அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் இலங்கைக்கு படகு மூலம் வந்து தஞ்சம் கோரியிருந்த 30 பேர் அடங்கிய ரோஹிந்திய முஸ்லிம்கள் கல்கிசை பகுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிங்கள அமைப்புகளினால் நேற்று போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன.
இதனை தொடர்ந்து அவர்களை அங்கிருந்து அழைத்துச் சென்று பூசா தடுப்பு முகாமில் தங்க வைப்பதற்கு நேற்று மாலை நடவடிக்கையெடுக்கப்பட்டிருந்தது.
0 Comments