2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு பொதுமக்கள் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் முன்வைக்க முடியும் என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
பொருளாதாரத்துறையில் உற்பத்தி, விவசாய மற்றும் சேவை ஆகிய பிரிவுகளுக்கு உட்பட்ட சகல தரப்பினரும், , நிபுணர்கள், தொழில்வாண்மையாளர்கள் உள்ளிட்டோர் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் இதற்கென சமர்ப்பிக்கமுடியும்.இதே போன்று பொதுமக்களும் தமது கருத்துக்கள் ஆலோசனைகளை முன்வைக்க முடியும் என்றும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அடுத்த மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் தமது கருத்துக்களையும், யோசனைகளையும் நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் தலைமைச் செயலகம், கொழும்பு கோட்டை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும்.-
0 Comments