வடகொரியா தனது ஆறாவதும் மிகப்பெரியதுமான அணுவாயுதசோதனையை ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டுள்ளதாக தென்கொரியாவும் ஜப்பானும் உறுதிசெய்துள்ளன. வட கொரியா செய்துள்ள 6 ஆவது அணு ஆயுத சோதனை இதுவாகும்.
வடகொரியாவின் அணுவாயுத பரிசோதனை மையத்திற்கு அருகில் பூகம்பம் ஓன்று ஏற்பட்டுள்ளது இது ரிச்டர் அளவில் 6.3 ஆக காணபபடுகின்றது என தெரிவித்துள்ள தென்கொரிய ஜப்பானிய அதிகாரிகள் முன்னைய பரிசோதனைகளை விட இது பத்து மடங்கு அதிகமானது என குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை கண்டங்களிற்கு இடையிலான ஏவுகணைகளில் பயன்படுத்த கூடிய அதிசக்தி வாய்ந்த ஹைடிரஜன் குண்டுகளை உற்பத்தி செய்துள்ளதாக வடகொரியா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நவீன வகையிலான தேர்மோநியுகிளியர் ஆயுதம் பாரிய அழிவை ஏற்படுத்தக்கூடியது என்றும் அதனை புதிய கண்டங்களிற்கு இடையிலான ஏவுகணையில் பொருத்தப்போவதாகவும் வடகொரியா குறிப்பிட்டிருந்தது.
வடகொரியாவின் அதிகாரபூர்வ செய்திஸ்தாபனமாக கேஎன்சிஏ இதனை தெரிவித்துள்ளது. வடகொரியா அதிசக்தி வாய்ந்த ஹைட்டிரஜன் குண்டை தயாரிப்பதில் சமீபத்தில் வெற்றிகண்டுள்ளதாக கேஎன்சிஏ தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட குண்டை தயாரிப்பதற்கான அனைத்து சாதனங்களும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன இதன் காரணமாக தனக்கு தேவையான அளவு அணுக்குண்டுகளை தயாரிக்கும் திறன் வடகொரியாவிற்கு கிடைத்துள்ளது உள்ளது என கேஎன்சி ஏ குறிப்பிட்டுள்ளது.

0 Comments