வடக்கு மாகாணத்திலுள்ள ஐந்து பொதுசன சுகாதாரப் பரிசோதகர்களை கட்டாய இடமாற்றத்துக்கு உட்படுத்தியமை உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடெங்குமுள்ள பொதுசன சுகாதாரப் பரிசோதகர்கள் அடுத்த வாரம் காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். தங்களது கோரிக்கைகளை முன்வைத்து உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடர்ந்திருப்பதாகவும், தாங்கள் எதிர்பார்க்கும் தீர்வுகள் கிடைக்காவிட்டால் மறு அறிவித்தல் எதுவுமின்றி நாடெங்கும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கவுள்ளதாகவும் பொதுசன சுகாதாரப் பரிசோதகர்களின் சங்கத் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை தாங்கள் மேற்கொண்ட அடையாள வேலைநிறுத்தத்துக்கு எவ்வித பலாபலனும் கிடைக்காததால் காலவரையறையற்ற போராட்டத்தில் இறங்க முடிவு செய்திருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
0 Comments