பொலிஸாரின் செயற்பாட்டை ஆட்சேபிக்கும் வகையில் பாடசாலை மாணவிகள் இருவர் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புத்தளம், தும்மலசூரிய பொலிஸ் நிலைய பொலிஸாரினால் மேற்கொள்ளப்படுகின்ற உபத்திரவம் மற்றும் பிரச்சனையை தாங்கி கொள்ள முடியாத பாடசாலை மாணவிகளே இவ்வாறு சத்தியக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளனர்
குறித்த இருவரும் நேற்று மாரவில பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தும்மலசூரிய, பிபிலதெனிய பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பாடசாலை மாணவிகளே இவ்வாறு சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
12 ஆம் மற்றும் 7 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் இந்த இரண்டு மாணவிகளின் கதையை கேட்ட பலர் சட்டத்தை நிறைவேற்றுமாறு பொலிஸாரிடம் கேட்டு கொண்டுள்ளனர்.
தும்மலசூரிய பொலிஸார் பணத்திற்காகவே செயற்படுவதாகவும், தங்களிடம் வழங்குவதற்கு பணம் இல்லை எனவும், குறித்த மாணவிகள் குறிப்பிட்டுள்ளார்.
இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட காணி பிணக்கு காரணமாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் பொலிஸார் ஒருதலைபட்சமாக செயற்படுவதாக மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மாணவிகளின் குடும்பத்தினரை கைது செய்ய பொலிஸார் முயற்சிப்பதாகவும், அதற்காக தந்தையை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட அச்சம் காரணமாக நேற்று முழுவதும் மறைந்திருந்தோம். இன்று சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளோம்.
குளியாப்பிட்டி பிரதேசத்தில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்தால் எங்களை பொலிஸார் கைது செய்திருப்பார்கள், அதனாலேயே மாரவில பிரதேசத்தில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ளோம் என அந்த மாணவி குறிப்பிட்டுள்ளார்.
மாணவிகள் சத்தியக்கிரகத்தில் ஈடுபட்ட பகுதிக்கு சென்ற பொலிஸார், பிரச்சினைக்கு உரிய தீர்வு பெற்றுத் தருவதாக உறுதியளித்தனர்.
மாரவில பொலிஸார் குறித்த மாணவிகளுக்கு உணவு வழங்கியதுடன், அவர்களை பாதுகாப்பாக அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர்.

0 Comments