சரத் பொன்சேகா கூறுவதைப் போன்று போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
|
இராணுவத்தின் முன்னாள் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜெகத் ஜயசூரிய மனிதப் படுகொலை விடயத்தில் குற்றம் இழைத்தார் என்று போரை நடத்திய இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார். விசாரணைகள் நடந்தால் ஆதாரங்களைத் தான் முன்வைப்பார் என்றும் கூறியிருந்தார். பிரேசில் உட்பட5 தென்னமெரிக்க நாடுகளின் தூதுவராக இருந்தவரான லெப்டினன்ட் ஜெனரல் ஜெகத் ஜயசூரிய மீது போர்க் குற்ற வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்தே பொன்சேகா இந்தக் கருத்தைத் தெரிவித்திருந்தார்.
ஆனால், ஜெனரல் ஜெகத் குற்றம் இழைக்கவில்லை என்று போர் முடிவடைந்த நிலையில் இலங்கையில் மனித உரிமைகள் அமைச்சராக இருந்தவரான சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மகிந்த சமரசிங்க மற்றும் தற்போதைய அரசில் அமைச்சராக இருப்பவரான ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சஜித் பிரேமதாச ஆகியோர் தெரிவித்திருந்தனர்.
ஜெகத் ஜயசூரியாவை அரசு பாதுகாக்கும். இராணுவத்தை எந்தச் சந்தர்பத்திலும் காட்டிக் கொடுப்பதில்லை என்பது அரசின் கொள்கை. பொன்சேகா கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து. இது தொடர்பில் அமைச்சரவையில் பேசப்படவில்லை. அதனால் அமைச்சரவைக் கூட்டுப் பொறுப்புக்கு உட்பட்ட விடயமாகாது’’ என்று மகிந்த சமரசிங்க கொழும்பில் நேற்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், ‘அமைச்சர் சரத்பொன்சேகாவே இறுதிப் போரை வழிநடத்தியவர். போரின் போது நடந்த விடயங்கள் அவருக்குத்தான் நன்கு தெரியும். அவருக்குத் தெரியாத ஒன்று அமைச்சர்களான சஜித் பிரேமதாச மற்றும் மகிந்த சமரசிங்கவுக்கு தெரிந்திருக்க வாய்பில்லை. சரத் பொன்சேகா கூறுவதைப் போன்று போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.
|
0 Comments