தற்போது நாட்டில் மாவட்டங்கள் பலவற்றில் நிலவும் தொடர் மழையுடன் கூடிய காலநிலையால் பிரதேசங்கள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அத்துடன் கொழும்பில் பல வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளன.
இதேவேளை எஹலியகொட பகுதியில் அபாய வலயத்தில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இரத்தினப்புரி , களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் மிக்க பகுதியில் வசிப்போரை அவதானமாக இருக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
0 Comments