Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

நாடெங்கிலும் இன்றும் அடைமழை பெய்யும்

இலங்கையின் பல பகுதிகளில் இன்றைய தினமும் மழை அல்லது அடைமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் இன்றைய தினம் மழை பெய்யக் கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மழை பெய்யும் போதும் தற்காலிகமாக பலத்த காற்று வீசும். இடி, மின்னல் தாக்கம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

பல பிரதேங்களில் தொடர்ந்து அதிக மழை பெய்து வருவதனால், மண் சரிவு எச்சரிக்கை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. களு கங்கையை சுற்றியுள்ள கீழ் மட்ட பகுதி மக்கள் தொடர்ந்து அவதானமாக செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments