Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் இனி பலசரக்கு கடைகளிலும் பியர்

உயர் ரக மதுபான வகைகளாக கருதப்படும் வைன் மற்றும் பியர் என்பவற்றை விநியோகத்துக்கான அனுமதிப் பத்திரத்தின் சட்ட திட்டங்களை இலகுபடுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் இது தொடர்பிலான தீர்மானமொன்றை கொண்டுவரவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன நேற்று (22) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலாத் துறைக்கு முக்கியத்துவம் வழங்கும் சகல நாடுகளிலும், எல்லாக் கடைகளிலும் வைன், பியர் போன்ற மதுபான வகைகள் விற்பனை செய்கின்றன.
இருப்பினும், இது தொடர்பில் எமது நாட்டில் மாத்திரமே அனுமதிப் பத்திரமொன்றை அறிமுகம் செய்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments